search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகை பிடித்தல்"

    அன்னூரில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது.

    அன்னூர்:

    சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் சுகாதார துறை அலுவலர்கள் அன்னூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அதில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அன்னூரில் உள்ள ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த 15 கடைகளில் இங்கு புகை பிடிக்கக் கூடாது என்ற விளம்பர பலகை இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 15 கடைகளிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 3 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் மரடோனா புகை பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிவித்து உள்ளார். #Maradona #Argentina
    கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா புகழின் உச்சத்தில் இருந்த அவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டவர். ஊக்க மருந்து உள்பட பல விவகாரங்களில் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனாலும் அவரை கால்பந்து ரசிகர்கள் வெகுவாக நேசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மரடோனா புதிய சர்ச்சையில் சிக்கினார். அர்ஜென்டினா- ஐஸ்லாந்து மோதிய ஆட்டத்தை அவர் நேரில் ரசித்தார். பார்வையாளர் மாடத்தில் இருந்த மரடோனா புகையை பிடித்தவாறு போட்டியை ரசித்தார். உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் 12 மைதானங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மரடோனா அதையும் மீறி புகை பிடித்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து மரடோனா தனது முகநூல் பக்கத்தில் புகை பிடித்ததற்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்.   #Maradona #Argentina
    ×